CWC6: விஜய் டிவியில் சமையல் நிகழ்ச்சிகளில் வித்தியாசம் அமைத்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. இதில் கலந்து கொள்ள போகும் உத்தேச போட்டியாளர்கள் பட்டியல் தற்போது இணையத்தில் கசிந்து இருக்கிறது.
விஜய் டிவியில் சமையல் நிகழ்ச்சியில் கோமாளிகளாக ஒருவரை இணைத்துக் கொண்டு சமைக்கும் புதிய ஐடியாவை உருவாக்கினர். முதல் சீசன் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைய இரண்டாவது சீசன் மிகப்பெரிய சூப்பர் ஹிட்டாக அமைந்தது.
தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சி பலருக்கு பிடித்தமானதாக அமைய ரசிகர்கள் குவிந்தனர். ஒரு எபிசோட்டை கூட மிஸ் பண்ண விரும்பாமல் தொடர்ந்து பார்த்து வந்தனர். தொடர்ச்சியாக நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்தது.
இந்நிலையில் ஐந்தாவது சீசன் தொடங்கப் போகும் ஆர்வத்தில் ரசிகர்கள் இருக்க நிகழ்ச்சிக்கு பெரிய பங்காக அமைந்த நடுவர் வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து தாமுவும் வெளியேற ரசிகர்கள் அதிர்ந்தனர்.
தயாரிப்பு குழு வேறு ஏற்கனவே வெளியேறி இருக்க புதிய நிறுவனம் மூலம் தாமுவை சரிகட்டி இருக்கிறது டிவி நிர்வாகம். இதை தொடர்ந்தே அவர் நிகழ்ச்சியில் தொடர்ந்தார். இருந்தும் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட சிக்கல்கள் உருவாகி அதற்கு இருந்த நல்ல பெயரை எடுத்துக் கொண்டது.
அது மட்டுமல்லாமல் அதுவரை எந்தவிதமான மோசமான கமெண்ட்டுகள் கூட அடிக்கப்படாத நிகழ்ச்சியில் வலிந்து திணிக்கப்பட்ட காமெடி கடுப்பை ஏற்படுத்தியது. இதனால் ரசிகர்கள் ஆர்வமும் குறைந்தது. இந்நிலையில் தற்போது ஆறாவது சீசனை சரி பண்ண பல வழிகளை தொடங்கி இருக்கின்றனர்.
அந்த வகையில் இந்த முறை தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் உடன் மேட் செஃப் கௌஷிக் இணைய இருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் சவுந்தர்யா, இன்ஸ்டா பிரபலம் சர்ஜின் உட்பட பல புதுமுகங்கள் ஒரு பக்கம் களமிறங்க இருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த சீசனில் பிரபல நடிகை பிரீத்தி சஞ்சீவ், தீபக், பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா, வடிவுக்கரசி, அய்யனார் துணை மதுமிதா உள்ளிட்டோர் கலந்துக்கொள்ளலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மே 4 முதல் நிகழ்ச்சி தொடங்கும் போது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.