கேரளாவின் தலைமைச் செயலாளராக சாரதா முரளிதரன் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த மாதம் முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில் இடம் மற்றும் பாலின பாகுபாடு குறித்து தான் பல விமர்சனங்களை எதிர்கொண்டதாக குறிப்பிட்டு இருந்தார். இவர் இன்று தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் தனது தோல் நிறம் குறித்து சிலர் விமர்சனம் செய்ததாக தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அதில் தான் கருமை நிறத்துடன் இருப்பதால் பல பிரச்சனைகளை சந்தித்ததாக அவர் கூறினார். தனது கணவர் இதே பதவியில் இருந்த போது வெண்மையாக இருந்ததாகவும், தான் இந்த பதவிக்கு வந்த போது இருள் சூழ்ந்து இருந்ததாகவும், கருப்பு நிறத்தால் பல அவமானங்களை சந்தித்ததாகவும் கூறினார். அப்போது நிறம் சார்ந்த கருத்தை தெரிவித்தது ஒரு உயர் பதவியில் உள்ள நபரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சாரதா ஆம் என பதிலளித்தார். ஆனால் யார் என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை.
பின்னர் நிறம் குறித்த பாகுபாடு பற்றி தான் பதிவிட்ட போது பல அதிகாரிகள் என்னை சந்தித்து எனக்கு ஆதரவு தெரிவித்தனர் என்று கூறினார். மேலும் 50 வருடங்களாக கருப்பு நல்ல நிறம் இல்லை என்று கூறிவந்த சமூகத்தின் மத்தியில் வாழ்ந்த எனக்கு என் குழந்தைகள் கருப்பு நிறத்தின் தனித்துவத்தை உணர வைத்தார்கள் என்று கூறினார்