வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத் துறை எதுவாக இருந்தாலும் கவலையில்லை: முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..!
Seithipunal Tamil May 01, 2025 12:48 AM

தி.மு.க.,வின் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாகநிறைவேற்றி வருகிறது.. 2026-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றிப்பெற்று  07-வது முறையாக தி.மு.க., ஆட்சி அமையும் என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், 'நம்மை எதிர்க்க கூடியவர்கள், எந்த நிலையில் வந்தாலும் சரி, எப்படி கூட்டணி வைத்து கொண்டு வந்தாலும் சரி, ஒரு கை பார்ப்போம் எனவும் பேசியுள்ளார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு கோரியுள்ளார். அத்துடன் அவர் அங்கு மேலும் பேசுகையில், கடந்த காலங்களில் ஊர்ந்து கொண்டிருந்த தமிழகம் இன்று கம்பீரமாக நடந்து செல்கிறது எனவும், இதை நான் சட்டசபையில் பேசும் பொழுது அப்படியே கடந்து சென்று இருக்கலாம் .ஆனால், அவர்கள் தானாக வந்து சிக்கிக் கொண்டார் என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், எதிர்க்கட்சி துணை தலைவர் ஊர்ந்து என்று சொல்ல வேண்டாம், நான் தவழ்ந்து என போட்டுக்கொள்ளுமாறு கூறுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போது, தவழ்ந்து, தவழ்ந்து முதல்வர் ஆகினேன் என பழனிசாமி கூறி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது என்றும், உலகிற்கு வழிகாட்டும் அளவிற்கு சிறப்பான ஆட்சியை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறியுள்ளார். மேலும், நாங்கள் நிச்சயமாக உறுதியாக, நம்மை எதிர்க்க கூடியவர்கள், எந்த நிலையில் வந்தாலும் சரி, எப்படி கூட்டணி வைத்து கொண்டு வந்தாலும் சரி, ஒரு கை பார்ப்போம் என்ற உணர்வோடு தான் தங்களது கடமைகளை ஆற்றி கொண்டு இருக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதையும் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், 2026-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200 தொகுதி என்ன 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை எண்ணென்று உறுதியளித்துள்ளார். மேலும், வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத் துறை ஆக இருந்தாலும் கவலையில்லை. தாங்கள் நெருக்கடியை பார்த்து வளர்ந்துள்ளோம். நீங்கள் நெருக்கடியை ஆதரிக்க வேண்டாம், எதிர்க்காமல் இருக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

இறுதியில்,  தி.மு.க.,வின் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். 07-வது முறையாக தி.மு.க., ஆட்சி அமையும் என்று அவர் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.