கோடையை கொண்டாடுங்க... நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் பயண கட்டணம் குறைப்பு!
Dinamaalai May 02, 2025 11:48 AM


 
தமிழகத்தில் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேஷம் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கி  நடைபெற்று வருகிறது. தனியார்  நிறுவனமான சுபம்  கப்பல் நிறுவனம் இயக்கி வரும்  நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில் பயண கட்டணத்தை  குறைத்துள்ளது. 


 
இதுகுறித்து பயணிகள் கப்பல் நிறுவனத் தலைவர்  2024 ஆகஸ்ட் 16ம் தேதி முதல் நாகையில் இருந்து காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த கப்பலுக்கு பயணிகளிடையே இரு நாட்டிலும் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் கப்பல் பயணிகளுக்கு உதவிடும் வகையில் தற்போதைய கட்டணம் ரூ. 8,500ல் இருந்து 8000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.  பயணிகள் தங்களது உடைமைகளாக 10 கிலோ மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், அதனை ஏழு கிலோ ஹேண்ட் பேக் எடையாகவும், 15 கிலோ செக் இன் எடையாகவும் எடுத்துச் செல்லலாம்.  


இது தவிர ரூ.15,000க்கு இரண்டு இரவு பயணம் உட்பட மூன்று நாள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் திட்டம், ரூ.30,000-க்கு 5 இரவுகள் 6 நாள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பேக்கேஜ் மூலம் ராமர் பாலத்தை நேரடியாகப் பார்வையிடவும், அதில் நடந்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பேக்கேஜ் திட்டத்தில் இரு வழி பயண கட்டணம், தங்கும் வசதி ,போக்குவரத்து வசதியும் செய்து கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.