பிரபல தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் திவ்யதர்ஷனி என்கிற டிடி நீலகண்டன் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பைலட் ஸ்டூடன்ட்ஸ் உடன் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷனி விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், அன்புடன் டிடி, அச்சம் தவிர்,ஜோடி சீசன் 7 உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும், காபி வித் டிடி நிகழ்ச்சி இவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. தனது பெயரிலேயே நிகழ்ச்சியை தொகுக்கும் அளவிற்கு பிரபலமானார்.
அன்னா ஆதர்ஷ் கல்லூரியில் எம்ஃபில் பட்டத்தை முடித்து அதே கல்லூரியில் பேராசியராகவும் பளியாற்றியிருந்தார். மேலும், செல்வி மற்றும் அரசி தொடர்களில் நடித்து அனைவரின் கவனத்தை பெற்ற டிடி நள தமயந்தி, விசில், பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
திவ்யதர்ஷினி தனது இயல்பான பேச்சு மற்றும் நகைச்சுவை உணர்வினால் பார்வையாளர்களுடன் சிறிது நேரத்திலேயே இணையும் திறனை கொண்டவர். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சலிப்பாகாத அளவிற்கு கடைசிவரை தொகுத்து வழங்கி தற்போது முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருகிறார்.
டிடி ஒரு நிகழ்ச்சிக்கு சுமார் 3 முதல் 4 லட்சம் வரை சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் கால்களில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த டிடி சிறிது நேரத்திற்கு மேல் நிற்க முடியாததால் தற்போது பெரும்பாலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்பை இழந்து வருகிறார்.
ஆனாலும், அடிக்கடி அந்த கால் வலியை எல்லாம் தாண்டி இது போல ரீல்ஸ் வீடியோக்களுக்கு நடனமாடி வருகிறார். சமூக வலைத்தளத்தில் படு ஆக்டிவாக இருந்து வரும் டிடி பைலட் ஸ்டூட்ன்ஸூக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்து ரீல்ஸ் பண்ண வச்ச வீடியாவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பசங்ககிட்ட மனசுல டாப் ஸ்டார் பிரசாந்துன்னு நினைச்சுக்கோங்கன்னு சொன்னேன் கற்பூரம் மாதிரி கேட்ச் பண்ணிட்டானுங்க நன்றி என பதிவிட்டுள்ளார்.