#featured_image %name%
விழிஞ்சம் துறைமுகத்தை தமிழகத்திடமிருந்து தட்டிப் பறித்த பினரயி விஜயன். இனியாவது பாடம் கற்றுக்கொள்வாரா ஸ்டாலின்?
மத்திய அரசுக்கு இணக்கமாக செல்வதை அடிமைத் தனம் என்று அர்த்தம் கொடுத்து.. எப்போதும் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தே மாநிலத்தின் வளர்ச்சியை தடுத்து கொண்டிருந்த திமுகவிற்கு…. கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட், சரியான சவுக்கடி கொடுத்துள்ளது.
விழிஞ்சம் துறைமுகம் தமிழகத்திற்கு வரவேண்டிய திட்டம். சுற்றுச்சூழல் பாதிப்பு, மீனவர்கள் போராட்டம் என்று சகட்டுமேனிக்கு மக்களை தூண்டிவிட்டு அரசியல் ஆக்கியது திமுக. இன்று அந்த திட்டம் கேரளாவுக்கு சென்று விட்டது மோடி அதை துவக்கி வைத்துள்ளார்.
சுற்றுச்சூழல், உயிரியல் என்று பேசிய சுற்று சூழல் வியாதிகள்! 2021 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு, நம்ம ஊர் கனிம வள கொள்ளையைப் பற்றி வாயை திறக்கவில்லை…. அது ஒரு புறம் இருக்கட்டும்…
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமர்ந்த மேடையிலேயே, காங்கிரஸ் கட்சியின் சசிதரூரும்…. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வரும் ஒருங்கே அமர்ந்து, கேரளாவுக்கான வளர்ச்சி அரசியலை முன்னெடுக்கிறார்கள்! ஆனால் இந்த திராவிட ஆடல் திமுகவோ… ஜெய் ஹிந்த் என்ற வார்த்தையை நீக்குவதும், ரூபாய் சின்னத்தை மாற்றும் “தாழ்ச்சி” அரசியலை முன்னெடுத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்….
அதானி என்று கூறினாலே அய்யோ அம்மா என்று கதறும் அதே கம்யூனிஸ்ட் கட்சி…. தன்னுடைய மாநில வளர்ச்சி என்றவுடன், கப் சிப் ஆகி அதே அதானியிடம் இந்த துறைமுகத்தை ஒப்படைக்கிறது…
வாக்கு அரசியல் வேறு, வளர்ச்சி அரசியல் வேறு என்பதை கேரள கம்யூனிஸ்ட்
முழுதும் உணர்ந்து இருக்கிறது இதைச் சுட்டிக்காட்டிய மோடி ஒரே மேடையில் காங்கிரஸ் எம் பி … கம்யூனிஸ்ட் முதல்வரும் ..அவர் விரும்பாத அதானியும் இருப்பதை பார்த்து சிலர் (இண்டி கூட்டணி) இன்று தூங்காமல் இருக்கப் போகிறார்கள் என்று நக்கலும் நையாண்டிமாக பேசியுள்ளார்.
மத்திய அரசுடன் மோதல் போக்கு அரசியலில் மட்டும் திமுக செலுத்திய கவனம்… வளர்ச்சி அரசியலை விலக்கியதன் விளைவு.. இதனால் தமிழகம் இன்று கடன் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
கச்சத்தீவு விவகாரத்தில் தமிழகத்தின் நலனை அடமானம் வைத்தது திமுக !காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை காற்றில் பறக்க விட்டது திமுக. இப்போது மத்திய அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு, தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களையும் தடுத்து இருக்கிறது திமுக !
மாநில நலன் சார்ந்த அரசியலில், மத்திய அரசின் துணையும் அதனுடன்
இணக்கமும் தேவை என்பதை கேரள கம்யூனிஸ்ட் முதல்வர் உணர்ந்து விட்டார். தமிழக முதல்வர் நிச்சயம் இதை என்றுமே உணரப் போவதில்லை !!ஸ்டாலினின் உண்மை முகத்தை மக்கள் பார்த்து விட்டார்கள்.
2026 இல் மத்திய அரசின் டபுள் எஞ்சின் சர்க்கார் தமிழகத்தில் அமைவது முக்கியம் என்பதை தமிழ் மக்கள் உணர தொடங்கி விட்டார்கள்.
News First Appeared in