பாகிஸ்தான் அரசுக்கும் பலுச்சிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு என்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்த நாட்டில் உள்ள முக்கிய அரசு கட்டிடங்கள், ராணுவ முகாம்கள் மற்றும் தற்காலிக நிர்வாக மையங்களை பலுச்சிஸ்தான் கிளர்ச்சி படை தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான மோதல் நடந்ததாக கூறப்படும் நிலையில் இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பலுச்சிஸ்தான் தீவிரவாதிகள் நேரடியாக இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில் அவர்களிடமிருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமான வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆனால் இதனை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. மேலும் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்துள்ள நிலையில் தற்போது பாகிஸ்தானில் உள்நாட்டு கலவரம் வெடித்துள்ளது அந்த நாட்டுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.