#featured_image %name%
“கார்பரேட்” அதானி… “காம்ரேட்” பினராயி… “ஹிந்துத்வ” மோடி… விழிஞ்சம் துறைமுக திறப்பு விழா!
இப்போது சுற்றுச் சூழல் பாதிக்காதா? ஆமைகள் குஞ்சு பொறிக்க இடையூறாகாதா? மீன்கள் சாகாதா? பவளப் பாறைகள் சிதையாதா?
கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்துக்கு மிக அருகேதான் குளச்சல். அங்கே இந்தத் துறைமுகம் வந்திருக்க வேண்டியது! அதற்கு சுற்றுச்சூழல் போராளிகள், மண்ணைக் காப்பவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், திராவிடியாள்கள், இடதுசாரிகள், முற்போக்குகள், லிபரல்கள்… எல்லாம் எகிறி எகிறிப் போராடித் தடுத்துவிட்டார்கள்.
குஜராத் மாதி வேறு இடமானால் “கார்ப்பரேட்” அம்பானிக்கு மோடி நாட்டின் செல்வங்களை தாரை வார்த்துவிட்டார் – என்ற வானுக்கும் பூமிக்கும் எகிறுவார்கள்!
இது அவர்கள் ஆளும் மாநிலம் ஆயிற்றே? முதல்வர் பிணராயி விஜயன் ஆயிற்றே? தொழில் வளர்ச்சி வேண்டுமே?
எனவே சிவப்புக் கொடியை சுருட்டி மூலையில் வீசிவிட்டு – “கார்ப்பரேட்” அம்பானி உள்ளே வருவதற்கு பச்சைக் கொடி காட்டி விட்டார்கள்! ஆனால் கம்யூனிஸ்டுகளிடம் ஒரு நல்ல வழக்கம் இருக்கிறது!
எந்த எந்தக் கொள்கைகளை அவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் மாநிலங்களில் குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டு எதிர்க்கிறார்களோ… அதே கொள்கைகளை அவர்கள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் மிகத் தீவிரமாக அமல்படுத்துவார்கள்!
அப்போது – “நாட்டின் துறைமுகங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பது – உள் கட்டமைப்புகளை பெருமுதலாளிகள் கைகளில் விடுவது”- என்றெல்லாம் பேச மாட்டார்கள். இப்போது அவர்கள் பார்வையில் அதானி “கார்ப்பரேட்” அல்ல – கேரளாவில் அவர் முன்னேற்றத்துக்கான “காம்ரேட்”!
இதை விட ஒரு படி மேலே போனவர் மேற்கு வங்கத்தில் புத்ததேவ் பட்டாசார்யா! டாடாவின் கார் தொழிற்சாலை தொடங்க அனுமதி கொடுத்ததோடு நிறுத்திவிட்டு – மக்களிடம் நிலத்துக்கு ஏக்கருக்கு குறைந்த பட்ச விலை என்று அறிவித்துவிட்டு – யார் விற்கிறார்களோ போய் வாங்கிக் கொள் என்று டாடாவை அனுப்பி இருந்தால் பிரச்னை இல்லை!
ஆனால் புத்ததேவ் சிங்கூரில் விவசாயிகள் நிலங்களை அரசே கையகப்படுத்தி – ஈட்டுத் தொகை விவசாயிக்கு வழங்கிடும் வகையில் – டாடாவிடம் ஒப்படைக்கும் விதமாக செயல்பட்டார்.
இதைப்பற்றி இவர்களுடைய பங்காளியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் – “ஜனசக்தி” பத்திரிகையில் தா.பாண்டியன் ஒரு கட்டுரையே எழுதினார்.
மீறிப் போராடிய விவசாயிகளை நந்திகிராமிலும் சிங்கூரிலும் ஈவிரக்கமில்லாமல் சுட்டுத் தள்ளியது புத்ததேவ் தலைமையிலான அப்போதைய CPM அரசாங்கம்!
எனவே கம்யூனிஸ்டுகள் எதிர்க்கட்சியாக உள்ள மாநிலங்களில் எதை எல்லாம் எதிர்ப்பார்களோ – அதை எல்லாம் அவர்கள் ஆளும் மாநிலங்களில் “கார்ப்பரேட்” துணையுடன் அமல்படுத்துவார்கள் என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம்.
News First Appeared in