விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” என்ற சீரியலில், இன்று ஒளிபரப்பான எபிசோடில் பரபரப்பான காட்சிகள் இடம்பெற்றன.இன்றைய எபிசோடில், பார்வதி வீட்டுக்கு ரோகிணி வருகிறார். “என் மீது உங்களுக்கும் கோபம் இருக்கும் என்று எனக்கு தெரியும்,” என்று சொல்ல, பார்வதி பதிலளிக்கிறார்: “கோபம் எல்லாம் இல்லை, வருத்தம் தான். உன்னை எனக்கு ரொம்ப வருடமாக தெரியும். ஆனால் என்னிடமே நீ பல உண்மைகளை மறந்து விட்டாய். ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம் என்று சொல்வார்கள். ஆனால் நீ ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொய்களை சொல்லிவிட்டாய்.”
இதற்கு ரோகிணி பதிலளிக்கிறார்: “நான் ஏன் பொய் சொன்னேன்? எல்லாம் மனோஜுக்காக தான்!”
அப்போது திடீரென விஜயா வர, ரோகிணியை ஒரு அறையில் பார்வதி மறைத்து வைக்கிறார். பின்னர் விஜயா பார்வதியிடம் “ஒரு கேரள சாமியார் உனக்கு தெரியும் என்று சொன்னாயே, அந்த சாமியாரை நான் பார்க்கனும், அவரிடம் சொல்லி, மனோஜையும் ரோகிணியையும் பிரிக்கப் போகிறேன். ரோகிணியை பிரித்தவுடன் மனோஜ்க்கு ஒரு பணக்கார பெண்ணை கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறேன்,” என்கிறார்.
இதைக் கேட்ட ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். பின்னர், விஜயா போனவுடன் “அவங்க என்னையும் மனோஜையும் பிரிக்க பிளான் போடுறாங்க. நீங்க எனக்கு ஒரு உதவி செய்யுங்க. எந்த சாமியாரிடம் போறீங்களோ, அந்த சாமியார் யார் என்று எனக்கு சொல்லுங்க. நான் அவரை முன்கூட்டியே பார்க்கிறேன்,” என்று பார்வதியிடம் கேட்கிறார்.
இதற்கிடையில் வித்யாவை பார்க்க அவரது காதலர் வருகிறார். “உங்கள் பெயரில் ஒரு பிளாட் வாங்கப் போகிறேன். அந்த பிளாட்டை கண்டிப்பாக பார்க்க வரணும்,” என்கிறார். அதற்கு வித்யா “சரி, வருகிறேன்,” என்று பதிலளிக்கிறார்.
இந்த நிலையில், மனோஜ் – ரோகிணியிடம் ரூ.30 லட்சம் ஏமாற்றிய நபரை மீனா தற்செயலாக கண்டுபிடிக்கிறார். அவரைப் பின்தொடர்ந்து சென்றும், அந்த நபரை அவரால் ஃபாலோ செய்ய முடியவில்லை. ஆனால் அதே நபர், வித்யாவை திருமணம் செய்யப் போகும் நபருக்கு பிளாட்டை காண்பிக்க செல்கிறார். இதனையடுத்து மீனா அந்த மோசடி நபரையும் கண்டுபிடித்து ரூ.30 லட்சத்தை வாங்கிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வித்யா மீனாவை தன்னுடைய வீட்டுக்கு வருமாறு கூப்பிட மீனாவும் அவருடைய வீட்டுக்குச் செல்லும் போது, “நாளை என்னுடைய வருங்கால கணவர் பிளாட் வாங்கப் போகிறார். நீங்களும் வாங்க’ என்கிறார், வருகிறேன், ஆனால் ரோகிணியையும் வரச்சொல்லுங்க என்று கூற, வேண்டாம், ரோகிணியை நான் இன்னொரு நாள் அழைத்து செல்கிறேன் என்று கூறுகிறார்.
மீனா சென்றபின், ரோகிணி வந்து, “என்னென்னமோ நடந்துட்டு இருக்கு. என்னை கூப்பிடவில்லை. ஆனால் மீனாவை கூப்பிடுறீயா!” என்று கோபமடைகிறார்.
அதற்கு வித்யா, ‘”நீ என் பெஸ்ட் பிரண்ட் என்பது உண்மைதான். ஆனா மீனா எனக்கு லவ் குரு. அதனால தான் அவங்களை முதல்ல கூப்பிட்டேன்,” என்கிறார். அதைக்கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைவதுடன் இன்றைய எபிசோடு முடிகிறது.