இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். இவர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருக்கிறார். இந்நிலையில் சஞ்சு சாம்சனுக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு விஜய் ஹசாரே தொடரில் சஞ்சு சாம்சனை கேரள கிரிக்கெட் சங்கம் விளையாட வைக்காதது தான் காரணம் என்று ஸ்ரீசந்த் கூறியிருந்தார்.
அதாவது கேரள கிரிக்கெட் சங்கம் அந்த தொடரில் அவரை விளையாட அனுமதித்திருந்தால் கண்டிப்பாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று ஸ்ரீ சந்த் கூறியதோடு தான் அவருக்கு ஆதரவாக இருப்பேன் என்றும் கேரள கிரிக்கெட் சங்கத்தை சேர்ந்த வீரர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்றும் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அவர் பேசியதை கேரள கிரிக்கெட் சங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக நேற்று நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ஸ்ரீ சந்துக்கு 3 வருடங்கள் வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். இதில் ஸ்ரீ சந்த் கேரள கிரிக்கெட் சங்கத்தில் கொல்லம் எரியஸ் அணியின் உரிமையாளராக இருக்கிறார்.
தற்போது அவருக்கு தடை விதிக்கப்பட்டதால் அணியை விற்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் இதேபோன்று சஞ்சு சாம்சன் தந்தைக்கு மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படலாம் என்று கூறப்படுகிறது. அதாவது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தன் மகன் தேர்வு செய்யப்படாததற்கு அவரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்..