சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது, தமிழகத்தில் திமுக அரசு அனைத்திற்கும் தடை விதிக்கிறது.
தமிழக வெற்றிக்கழகத்தின் நிறுவனர் விஜய்யின் கட்சிக்கு மட்டும் அல்ல, சமீபத்தில் திருவல்லிக்கேணியில் நடைபெற்ற மனதின் குரல் என்ற பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு கூட திமுக அரசு தடை விதித்தது.
அதற்கு மண்டபத்தில் வைத்து நிகழ்ச்சியை நடத்த வேண்டும் எனக் காரணம் கூறினார்கள். தமிழ்நாடு அரசு அனைத்திற்கும் தடை விதித்து வருகிறது. மேலும் மத்திய அரசு எந்த அறிவிப்பை வெளியிட்டாலும், அதற்கு மாநில அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என அவர் தெரிவித்தார்.