மதுரையில் அதிமுக கட்சியின் சார்பில் நடைபெற்ற மே தின கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு போராட்ட குணமே தற்போது இல்லை. அவர்கள் திமுக செய்யும் அக்கிரமங்களை கேட்காமல் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தொழிலாளர்களுக்கும் அவர்களுக்கும் இடையே இடைவெளி அதிகரித்துவிட்ட நிலையில் நானும் ரவுடிதான் என்பது போல் தற்போது மே தின விழாவை நடத்துகின்றனர். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தற்போது தனக்கு பதவியே வேண்டாம் என்கிற நிலையில் இருக்கிறார்.
திமுகவை உருவாக்கிய பிடி ராஜன் குடும்பத்தை அவர்கள் அசிங்கப்படுத்தி விட்டனர். ஆடியோவில் உண்மையை சொன்னதற்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதற்கு இந்த தண்டனை. அந்த ஆடியோ வெளியான பிறகு முதல்வர் ஸ்டாலின் அவருக்கு தண்டனை கொடுப்பது போல் இலாகாவை மாற்றி அசிங்கப்படுத்தி விட்டார். இதற்கு கண்டிப்பாக அவர் பதில் சொல்லியே ஆகணும். திமுகவில் இருப்பவர்கள் அனைவருமே ஜாமீன் அமைச்சர்கள் தான். திமுக அமைச்சர்களை பொறுத்தவரையில் கலெக்சன் மற்றும் கரப்சன் மட்டும் தான் அவர்களின் நோக்கம் என்றார். மேலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததை திமுகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் விமர்சித்தார்.