தேமுதிக கட்சியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன் விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை பிரேமலதா விஜயகாந்துக்கு அனுப்பியுள்ளார். அதாவது எல்.கே சுதீஷூக்கு மாநில பொருளாளர் பதவி வழங்கப்பட்டதால் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து பொதுக்குழு கூட்டத்திலிருந்து வெளியேறினார். இதை தொடர்ந்து தற்போது கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதேபோன்று தே.மு.தி.க கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பியும் தேமுதிக உயர்மட்ட குழு பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு பிரேமலதா விஜயகாந்திற்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். தன்னை விடுவிக்காவிடில் தானே பதவியிலிருந்து விலகுவேன் என்றும் கூறியுள்ளார். மேலும் ஒரே நாளில் இரு முக்கிய புள்ளிகள் தேமுதிக கட்சியில் இருந்து விலகியது பிரேமலதா விஜயகாந்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.