வைரலாகும் பரபரப்பு வீடியோ... பிரபல நடிகை மஞ்சு வாரியரின் இடுப்பில் கை வைத்த ரசிகர்கள்!
Dinamaalai May 03, 2025 05:48 PM


மலையாளத் திரையுலகில் முண்ணனி நடிகைகளில் ஒருவரான நடிகை மஞ்சு வாரியார் கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்தார். அங்கு ரசிகர்கள் அவரிடம்  தவறாக நடந்துகொண்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானவர்.  தொடர்ந்து பின்னர் அஜித், ரஜினி படங்களில் நடித்தார். கடைசியாக தமிழில் விடுதலை 2 படத்தில் நடித்திருந்தார்.


இந்நிலையில் நேற்று மே 2ம் தேதி வெள்ளிக்கிழமை கடை திறப்பு விழாவுக்குச் சென்ற மஞ்சு வாரியரைப் பார்க்க கூட்டம் கூடியது.இந்தக் கூட்டத்தினைக் கண்ட மஞ்சு வாரியர் காரில் ஏறி நின்று கை அசைத்துக்கொண்டிருப்பார்.இந்தக் கூட்டத்திற்கு நடுவில் யாரோ ஒருவர் மஞ்சு வாரியரின் இடுப்புப் பகுதியில் கை வைப்பதாக வீடியோவில் பதிவாகியுள்ளது.இது ஆணா, பெண்ணா என எதுவும் தெரியவில்லை. ஏனெனில் அங்கு பெண்களும் அதிகமாக குவிந்துள்ளனர்.  கையில் கைக்குட்டையுடன் இருப்பதால் அது பெண்ணாக இருக்கலாம் என நெட்டிசன்கள்  கூறி வருகிறார்கள்.


மஞ்சு வாரியர் இதைக் கண்டுகொள்ளாமல் ரசிகர் ஒருவருக்கு செல்ஃபி போஸ்  கொடுத்துவிட்டு காரில் சென்றுவிடுவார். இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் அந்த முகம் தெரியாத ஒருவரின் அநாகரீகமான செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  நடிகைகள், நடிகர்களுக்கு பொதுவெளியில் பாதுகாப்பு இல்லை என்பதும் தனியுரிமை கேள்விக்குள்ளாவது குறித்தும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.