பிரதான் மந்திரி கிசான் மான்தன் யோஜனா என்பது மாத வருமானம் ரூ.15,000 வரை இருக்கும் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும். இதில் சந்தாதாரர் 60 வயதிற்குப் பிறகு மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.3000 ஓய்வூதியம் பெறுகிறார்.
மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் மான்தன் யோஜனா திட்டம் விவசாயிகளுக்கு ஒரு ஊக்க மருந்தாக செயல்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு முதுமையில் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக அரசாங்கம் ரூ.3,000 வழங்கும். அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்தத் தொகை ஏதோ ஒரு வகையில் பெரிய ஆதரவாக இருக்கின்றது.
இந்த திட்டத்தில் சேர சில அத்தியாவசிய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். பிரதம மந்திரி கிசான் மான்தன் யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 ஓய்வூதியம் பெறுவதற்கான நிபந்தனைகளை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
பிரதம மந்திரி கிசான் மான்தன் யோஜனா தொடர்பான சில அத்தியாவசிய விஷயங்கள்:
- முதலில், உங்கள் பெயர் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவுடன் இணைக்கப்பட வேண்டும்.
- இது தவிர, உங்கள் வயது 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- உங்கள் வயது 40 வயதுக்கு மேல் இருந்தால், இந்த திட்டத்தில் கணக்கை திறக்க முடியாது.
- இந்தத் திட்டத்தில் 18 வயதில் கணக்கு தொடங்கினால், நீங்கள் குறைவாக முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
- 40 வயதில் கணக்கு தொடங்கினால், நீங்கள் அதிகமாக முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
- அதாவது, எத்தனை குறைவான வயதில் முதலீடு செய்கிறீர்களோ, உங்கள் முதலீடும் அத்தனை குறைவாக இருக்கும்.
பிரதமர் கிசான் மான்தன் யோஜனாவின் கீழ், 60 வயதுடையவர்களுக்கு ஓய்வூதிய சலுகைகள் கிடைக்கின்றன. இந்த வயதிற்குப் பிறகு, நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 ஓய்வூதியம் பெறத் தொடங்குவீர்கள். இதன்படி, உங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.36,000 லாபம் கிடைக்கும். இந்தத் தொகை உங்கள் செலவுகளை ஈடு செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.
இந்தத் திட்டத்தில் சேர்வதற்கான தகுதி என்ன?
- பிரதமர் கிசான் மான்தன் யோஜனாவில் சேர, பயனாளி அமைப்புசாரா துறையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- அவரது மாத வருமானம் ரூ.15,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- தொழிலாளியின் வயது 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- இதனுடன், வருமான வரி செலுத்துவோர் மற்றும் அரசு ஊழியர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைய முடியாது.
- MPFO, NPS மற்றும் ESIC உறுப்பினர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற முடியாது.