படுகாயம் அடைந்த கைதி மற்றும் கைதியால் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் விஜயராகவன், முதல்நிலை காவலர் செல்வகுமார் படுகாயம் அடைந்த நிலையில் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கியால் சுடப்பட்ட கைதி நரேஷிற்கு முதலுதவி சிகிச்சையளித்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கைதி பதுங்கி இருந்த இடமான சங்ககிரி மலை அடிவாரம் ராயலூர் சாலை அருகே துப்பாக்கி சூடு நடந்த இடத்தினையும் சேலம் சரக டிஐஜி உமா மற்றும் நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணன் ஆகியோர் பார்வையிட்டு பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல் உதவி ஆய்வாளர் விஜயராகவன், முதல் நிலை காவலர் செல்வகுமார் ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதனைத் தொடர்ந்து மூதாட்டிகளை குறிவைத்து தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.