தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூகையூர் சாலையில் பூண்டி எல்லையில் ஊதுவத்தி, சாம்பிராணி தனியார் கம்பெனி வைத்து நடத்தி வருபவர் சின்னசேலம் அடுத்த அம்மையகரம் கிராமத்தில் வசித்து வரும் ரவிசங்கர் மகன் மாணிக்கம்.
இவர் இன்று சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணி அளவில் திடீரென கீற்றுக் கொட்டகை தீப்பிடித்து எரிந்ததில் சாம்பிராணி, ஊதுபத்திகள் தீயில் கருகி கொட்டகை முழுவதும் சேதமடைந்தன.
தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்துக்கு விரைந்த சின்னசேலம், நைனார்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்புப் படையினர் தண்ணீரைக் கொண்டு தீயை அணைத்தனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை மூட்டம் காணப்பட்டது.