மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் மஞ்சு வாரியர். இவர் தமிழ் சினிமாவிலும் பிரபலமான நடிகையாக இருக்கிறார். இவர் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொண்டபோது ஏற்பட்ட ஓர் அருவருப்பான சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது நடிகை மஞ்சு வாரியர் விழா முடிந்து வாகனத்திற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, ரசிகர்கள் கூட்டம் அவரை சூழ்ந்தது. அதில், ஒரு ஆண் ரசிகர் அவரது இடுப்பு பகுதியை தொட முயன்றது வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது. அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக, நெட்டிசன்கள் அதிருப்தியுடன் தனியுரிமைக்கு எதிரான செயல் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது பெண்ணுரிமையை கேள்விக்குள்ளாக்கும் செயல்” என்றும், “பொது இடத்தில் ஒரு நடிகையை இப்படி அவமரியாதியாக நடத்துவது தவறு” என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர், “அந்த ரசிகர் மஞ்சுவை கூப்பிட கையை நீட்டியபோது தவறுதலாக இடுப்பில் கை பட்டது” என விளக்கம் அளிக்க முயன்றாலும், பலரும் அந்த செயல் எந்த வகையிலும் நியாயமில்லை என்றும், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தியுள்ளனர்.
மஞ்சு வாரியர் இதுகுறித்து எந்தவொரு பதிலும் அளிக்காமல் அமைதியாக இருந்தாலும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடப்பது பொது நிகழ்ச்சிகளில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டுவதாக ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். திரைபிரபலங்கள், பொது நிகழ்வுகளுக்கு வரும்போது பாதுகாப்பு மிகுதியளவில் வழங்கப்பட வேண்டும் என்றும், மதிப்பும் மரியாதையும் உள்ளதை போன்றே இருக்கவேண்டும் என்றும் சமூக வலைதளங்கள் முழுவதும் விவாதங்கள் எழுந்துள்ளன. மேலும் இது குறித்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.