VijayTV: ரோகிணியின் அடுத்த சக்ஸஸ்… மீனாவை சரியாக மாட்டிவிட்ட சக்திவேல்… அதிரடி புரோமோ!
CineReporters Tamil May 04, 2025 06:48 PM

VijayTV: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் வார புரோமோ குறித்த சுவாரஸ்ய தொகுப்புகள்.

ஏற்கனவே சக்திவேலை கொலை செய்துவிட்டதாக கோமதி, மீனா புலம்பி கொண்டு இருக்கின்றனர். ஆனால் அவரோ மயக்கம் மட்டுமே போட்டு இருந்ததால் சரியாக செந்தில் மற்றும் கதிர் வந்து எழுப்பும்போது தப்பித்து ஓடிவிடுகிறார்.

இந்நிலையில் ஏற்கனவே சக்திவேலின் கடை ஒன்றை மீனா அரசு நிலத்தை அபகரித்ததாக சொல்லி இடித்து விடுகிறார். அடுத்ததாக அவருடைய இன்னொரு கட்டிடம் மீதும் புகார் மனு அனுப்பி இருக்கிறார். இதனால் சக்திவேல் மீண்டும் மீனா மீது கடுப்பில் இருக்கிறார்.

தற்போது அவரை மாட்டிவிடும் விதமாக லஞ்ச காசை இன்னொருவர் கையில் கொடுக்க வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் மாட்டி விடுகிறார். மீனா திகைத்து போய் நிற்க அப்போ வரும் சக்திவேலும் என்னிடமும் காசு கேட்டதாக சொல்கிறார்.

தற்போது மீனாவை கைது செய்ய வாய்ப்பு இருப்பதால் பாண்டியன் மற்றும் மகன்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். சிறகடிக்க ஆசை தொடரில் பெரிய கதையாக இன்னும் பழைய ரூட்டிற்கு வரவில்லை. 

ரோகிணி மற்றும் விஜயா இரண்டு பேருமே மாந்தீரிகரை சந்தித்து மனோஜிற்கு கயிறு வாங்கி வருகிறார்கள். தற்போது இரண்டு பேருமே கயிறு கட்டி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மனோஜ் ரூமில் அயர்ன் பாக்ஸ் மீது கை வைத்து கத்துகிறார்.

ரோகிணி நீ ஏன் ஒழுங்க பார்க்காம இருக்க எனத் திட்ட மனோஜ் ரோகிணியை திட்டுகிறார். அப்போ உள்ளே வரும் விஜயா ரோகிணியை திட்ட மனோஜ் விஜயாவை திட்டி அனுப்பிவிடுகிறார். இதை பார்க்கும் ரோகிணி கயிறு வேலை செய்து போலயே என நினைத்து கொள்ளுகிறார். 

இதனால் இந்த வாரம் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ்2 கொஞ்சம் சுவாரஸ்யமாக சொல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.