ஈரோட்டில் அதிர்ச்சி... மின்வாரிய பெண் அலுவலா் தூக்கிட்டு தற்கொலை!
Dinamaalai May 04, 2025 06:48 PM

ஈரோடு மாநிலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மின்வாரிய பெண் ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு 46 புதூா், கரும்பாறை, இந்தியன் நகா் முதல் வீதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (52).  அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வரும் இவரது மனைவி மகேஸ்வரி (49). இவா் ஈரோடு மின்வாரியத்தில் கணக்குப் பிரிவு மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வந்தாா். இவா்களுக்கு ஒரு மகன் உள்ளாா்.


மகேஸ்வரிக்கு உடலில் பிரச்னை இருப்பதால் கடந்த 2024ம் ஆண்டு தனியாா் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் உடல்நிலை சரியாகததால் மனவேதனையில் இருந்த மகேஸ்வரி வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா்.

இதைப் பாா்த்த அவரது குடும்பத்தினா் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துவிட்டு மகேஸ்வரி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து ஈரோடு தாலுகா போலீசாr வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.