CWC6: குக் வித் கோமாளியின் அதிகாரப்பூர்வ போட்டியாளர் பட்டியல்… இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்கலையே!
CineReporters Tamil May 04, 2025 08:48 PM

CWC6: குக் வித் கோமாளியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கப்பட இருக்கும் நிலையில் இதில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

பொதுவாக ரசிகர்களின் ஸ்டெஸ் பஸ்டர் ஷோ என்றால் அது குக் வித் கோமாளிதான். அப்படி இருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த சீசன் மிகப்பெரிய அளவில் டல் அடித்தது. இதனால் ரசிகர்கள் இனிமேல் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் வரவேற்பு இருக்காது என பேசி வந்தனர்.

அதை சரிகட்டும் விதமாக தயாரிப்பு நிறுவனம் இந்த முறை நிறைய மாற்றங்களை நிகழ்ச்சியில் கொண்டு வந்திருக்கிறது. முதல் முறையாக இரண்டு ஜட்ஜ்கள் இல்லாமல் மூன்றாவது நடுவராக மேட் செஃப் கௌஷிக் உள்ளே வந்து இருக்கிறார்.

கோமாளிகளாக புகழ், சுனிதா, குரோஷி, ராமர் உள்ளிட்ட பலர் ஏற்கனவே இருக்கும் நிலையில் பல புது முகங்கள் உள்ளே வந்திருக்கின்றனர். யூட்யூப்பில் இருந்து நிறைய பேர் உள்ளே இறக்கப்பட்டுள்ள நிலையில் பிக் பாஸ் சீசன் 8-ல் கலந்து கொண்ட சௌந்தர்யாவும் தற்போது கோமாளியாக வந்திருக்கிறார்.

இந்நிலையில் போட்டியாளர்களாக லட்சுமி ராமகிருஷ்ணன், பிரியா ராமன், பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு,  ஷபானா, அமரன் புகழ் உமர் லதிவ், விவசாயி நந்தகுமார், யூடியூபில் பிரபலமான சௌந்தர்யா, மெரீனாவில் கடை வைத்து ஹிட்டடித்த சுந்தரி அக்கா என பட்டியல் வித்தியாசமாக இருக்கிறது.

பொதுவாகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் காமெடிகள் ஆன் டைமில் போடப்பட்டதால் தான் ஹிட்டு அடித்தது. அந்த வகையில் இதற்கு பெயர் போன ராஜூ உள்ள வந்திருப்பது தற்போது ரசிகர்களிடம் மேலும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

இது மட்டுமல்லாமல் இதுவரை சீரியஸாக பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன் அவரை கலாய்த்து ஹிட்டடித்த ராமர் என ஒரே சீசனில் இருப்பதால் நிகழ்ச்சி கலைக்கட்டும் என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. இன்று மே 4 ந் தேதி இரவு 8 மணிக்கு நிகழ்ச்சி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post first appeared on .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.