“இந்த மனசு தான் உண்மையான கடவுள்”.. பேருந்தில் திடீரென மயங்கிய சிறுமி… ஹாஸ்பிடலுக்கு பஸ்சை ஓட்டி டிரைவர்… நெகிழ்ச்சி சம்பவம்..!!
SeithiSolai Tamil May 05, 2025 12:48 AM

கேரளாவில் உள்ள நிலம்பூர் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் நேற்று காலை பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது உடல்நலக் குறைவின் காரணமாக திடீரென சிறுமிக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் பதட்டமடைந்த சக பயணிகள் ஓட்டுநரிடம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளனர். அவர்கள் கூறியதை கேட்டு ஓட்டுநர் அரசு மருத்துவமனைக்கு பேருந்தை விரைவாக ஓட்டி சென்றார்.

அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்தனர். இதைத்தொடர்ந்து ஓட்டுநரின் மனிதாபிமான செயலை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் ஓட்டுநரின் செயலை பாராட்டி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.