அண்ணனைக் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்து அதிர வைத்த தம்பி!
Dinamaalai May 04, 2025 08:48 PM

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் அண்ணனை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஆர்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை மகன் சரவணன்(41) தொழிலாளி. இவரது தம்பி காசிவேந்த பெருமாள்(38). குழந்தைகள் விளையாடுவது தொடர்பாக சகோதரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த காசிவேந்த பெருமாள், கிரிக்கெட் மட்டையால் சரவணனை தாக்கினார். 

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த சரவணனை கத்தியால் குத்திய காசிவேந்த பெருமாள் கொலை மிரட்டல் விடுத்தார். கத்திகுத்தில் படுகாயமடைந்த சரவணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர்எட்வின் அருள்ராஜ் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள காசிவேந்த பெருமாளை போலீசார் தேடி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.