அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தற்போது புலிக்குட்டிக்கு பால் கொடுப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதோடு நான் எடுத்த புகைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் இதுதான்.
தாயில்லா புலிகுட்டிக்கு பாலூட்டியதுதான் என்று பதிவிட்டுள்ளார். இந்த புலியை பார்த்த இணையதள வாசிகள் பலரும் இது உண்மையான புலியா? இல்லை எனில் பொம்மைப் புலியா என்று கலாய்த்து வருகிறார்கள். மேலும் ஏற்கனவே சுற்றுலா சென்ற செல்லூராஜூ இது போன்ற புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.