தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை தொடர்ந்து திண்டுக்கல் லியோனி கடுமையாக விமர்சித்து வருகிறார். இவர் ஒரு பேச்சாளராகவும் நடிகராகவும் இருக்கும் நிலையில் திமுக கட்சியின் ஆதரவாளர் என்பதால் தொடர்ந்து விஜயை விமர்சித்து வருகிறார். அந்த வகையில் கோவை பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட திண்டுக்கல் லியோனி தமிழக வெற்றி கழகத்தை கடுமையாக விமர்சித்தார். இது பற்றி அவர் கூறியதாவது, தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் ஒருவர் TVK TVK என கட்டியது என் காதில் டீ விற்க டீ விற்க என்று கேட்டது.
2026 ஆம் ஆண்டு டீ விற்கத்தான் போகிறீர்கள். ஒரு கட்சித் தலைவரின் வேனில் முன்னாள் நின்று டப்பாங்குத்து ஆடுவதுதான் கட்சயா.? ஒரு அரசியல் தலைவரின் முன்பு குத்தாட்டம் போடுவது கண்டிப்பாக அரசியல் கட்சியாக இருக்க முடியாது என்ற தமிழக வெற்றிக் கழகத்தை கிண்டல் அடித்தார். மேலும் சமீபத்தில் கோயம்புத்தூரில் விஜய் ரோடு ஷோ நடத்தும்போது அவரின் பிரச்சார வாகனத்தின் மீது தொண்டர்கள் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை குறிப்பிட்டு தான் திண்டுக்கல் லியோனி நடிகர் விஜயை விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.