தமிழக வெற்றி கழகத்திலிருந்து சமூக வலைதள பிரபலமான வைஷ்ணவி விலகுவதாக அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரை TVK அக்கா என்று அழைத்து வந்த நிலையில் தன்னை கட்சியில் பணி செய்யவிடாமல் மூத்த தலைவர்கள் தடுப்பதாகவும் நீயெல்லாம் ஒரு பெண்ணாக இருந்துவிட்டு ஏன் அரசியலுக்கு வருகிறாய் எதற்காக கருத்து சொல்கிறாய் என்றெல்லாம் மட்டம் தட்டுவதாகவும் அவர் கூறினார். அதோடு சிலரின் விமர்சனங்களால் இளம்பெண்கள் தமிழக வெற்றி கழகத்திலிருந்து விழகுவார்கள் என்று வைஷ்ணவி கூறிய உனக்கெல்லாம் எதற்கு அரசியல் என்று விமர்சித்ததால் மிகுந்த மன வேதனையுடன் தமிழக வெற்றிக்கழகத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறிய நிலையில் இது பற்றி இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, பெண்கள் தங்களுடைய வாழ்க்கையை அரசியலுக்கு அர்ப்பணிக்க நினைக்கும் போது தங்களுடைய குடும்பத்தில் இருந்தோ அல்லது சமுதாயத்தில் இருந்தோ அவ்வளவு சுலபமாக ஆதரவு வராது. ஆனால் இதையெல்லாம் தாண்டி அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்யும் பணி என்று நினைத்தால் எவ்வளவு பெரிய தடையை வேண்டுமானாலும் நம்மால் தாண்ட முடியும்.
எனவே சகோதரி உண்மையாக அரசியலில் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று நினைத்தால் எங்கள் கட்சிக்கு தாராளமாக வரலாம் என்றார். மேலும் வானதி சீனிவாசன் நேரடியாகவே வைஷ்ணவிக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அவர் என்ன முடிவு எதிர்க்க போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.