பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா–பாகிஸ்தான் உறவுகளில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த சைபர் குழு இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து தாக்கியுள்ளது.
“Pakistan Cyber Army” எனும் குழு X தளத்தில் வெளியிட்ட தகவலில், இந்திய ராணுவ பொறியாளர் சேவைகள், மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் தரவுகளை தங்களது ஹேக்கர்கள் தாக்கியதாக கூறியுள்ளது.
அந்த அமைப்பின் 1600 பயனர்களின் தரவுகள் உள்ளிட்ட 10 ஜிபி அளவிலான முக்கிய தகவல்களை தாங்கள் கைப்பற்றியதாக அந்த குழு தெரிவித்துள்ளது. சைபர் பாதுகாப்பு பிரிவுகள் இந்த ஹேக்கிங் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இதுபோன்ற தாக்குதல்கள் எதிர்காலத்தில் தேசிய பாதுகாப்புக்கு பெரும் சவாலாக இருக்கக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.