மாலத்தீவின் புதிய அதிபராக முகமது முய்சு பதவி வகித்து வருகிறார். இவர் நேற்று காலை பத்திரிகையாளர்களை வரவழைத்து சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். காலை 10 மணிக்கு தொடங்கிய செய்தியாளர்கள் சந்திப்பு நள்ளிரவு வரை தொடர்ந்து 14 மணி நேரம் 54 நிமிடம் நடந்தது.
முன்னதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி என்பவர் 14 மணி நேரம் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்து சாதனை படைத்தார். இப்போது அவரது சாதனையை மாலத்தீவு அதிபரான முகமது முய்சு முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.