திரண்ட திரையுலகம்... நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்.. இன்று காலை இறுதிசடங்குகள்!
Dinamaalai May 06, 2025 02:48 PM

தமிழ் சினிமாவில் மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் கவுண்டமணி காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர். இவரது மனைவி பெயர் சாந்தி. இவர்களுக்கு செல்வி, சுமித்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை பெசண்ட்நகர் மின் மயானத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.