Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடின் பரபரப்புகள்.
காரில் வந்து கொண்டிருக்கும் ராஜி கோமதியிடம் மாமாவிடம் இந்த விஷயத்தை எப்படி சொல்வது என தயங்கிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் கோமதி நீ எந்த கவலையும் படாத மாமா கிட்ட சொல்லி சம்மதம் வாங்க வேண்டியது என் பொறுப்பு என அவரை சமாளிக்கிறார்.
பின்னர் அவரை மீனா கலாய்த்துக்கொண்டு காரில் அவர்கள் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் வருவதற்குள் சுகன்யா சோசியல் மீடியாவில் பரவிய வீடியோவை வீட்டினரிடம் காட்டிவிடுகிறார். இதை பார்க்கும் பாண்டியன் ராஜி கோயில் விழாவில் நடனம் ஆடியதை தெரிந்துகொண்டு கோபமடைகிறார்.
எல்லோரும் வீட்டிற்கு வந்து இறங்க வாசலில் கூட ராஜிக்கு பயம் ஏற்படுகிறது. ஆனால் கோமதி எந்த பயமும் படாத நான் உன்னை காப்பாத்திடறேன் என சொல்லியே உள்ளே கூட்டி செல்கிறார். அப்பொழுது ராஜி ஆடிய பாடல் வீடியோ ஓடிக் கொண்டிருக்கிறது.
தங்கமயில் உடனே மீனாவை நைசாக அழைத்து அதை காட்டி விடுகிறார். கதிர் ராஜியிடம் இந்த பாட்டை நீ எங்கேயோ கேட்டிருக்கல எனக் கூற நேத்து போட்டியில் ஆடுனேனே என்கிறார் ராஜி. உன் வீடியோ தான் சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது போல என அதிர்ச்சி கொடுக்கிறார்.
மீனாவும் பாண்டியன் பார்க்கும் வீடியோவை பார்த்து ராஜியிடம் உன்னுடைய வீடியோ தான் என சைகை காட்டுகிறார். கோமதி காப்பாற்றுவார் என நம்பிக்கையில் இருந்த ராஜியை அவர் அழகாக மாற்றிவிட்டு நான் கூட ஆட வேண்டாம் சொன்னேன் என நழுவி கொள்கிறார்.
இதனால் ராஜி திணற தொடங்க ஒரு கட்டத்தில் மீனா உள்ளே வந்து திறமைக்கு மரியாதை கொடுக்கணும். அந்த இடத்துல நம்ம திறமையை மறைக்காமல் செஞ்சுடனும் நீங்க தான் மாமா சொன்னீங் என பிளேட்டை மாற்ற பாண்டியன் நானா சொன்னேன் என கேட்க பழனி மற்றும் செந்திலும் மீனாவுக்கு சப்போட்டா பேசி விடுகின்றனர்.
ஒரு கட்டத்தில் அவரை சமாளிக்கும் விதமாக பேசும் மீனா ராஜியை காப்பாற்றி பைக் வாங்கிய விஷயத்தையும் சொல்லிவிடுகிறார். கோபமான பாண்டியனை சாந்தப்படுத்தி அனுப்பி வைத்து விடுகிறார். கோமதி வாய் பேச வர அவரை மீண்டும் கலாய்க்கிறார் மீனா. ராஜி மீனாவிற்கு நன்றி சொல்கிறார்.
The post first appeared on .