சோஷியல் மீடியாவில் பிரபலமாகும் ஆசையில் பலர் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், இளம் பாடகர் ஒருவர் தனது வீடியோவை வைரலாக்கும் நோக்கத்தில் அபாயகரமான செயலில் ஈடுபட்ட சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில், அந்த இளைஞர் தனது பாடலை பிரபலப்படுத்த புதிய யுக்தியை முயற்சி செய்துள்ளார். அதாவது, வாலிபர் பேண்டில் தீவைத்து பாடி கொண்டே வீடியோ எடுத்துள்ளார். ஆனால், மெதுவாக தீ பரவ தொடங்கியதால், பயந்துபோன அவர் தனது பேண்டை கழற்றி எறிந்து தப்பிக்க முயன்றது வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாக, பலரது கவனத்தையும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது. “இது முட்டாள்தனமான செயல்” என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளர். மற்றொருவர், “வீடியோக்கள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இதுபோன்ற அபாயமான வீடியோவை எடுக்கும் இளைஞர்கள் வருந்தக்கூடிய பாடம் இதுதான்” என்று பதிவிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் இளைய தலைமுறை எளிதில் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கும் தவறான முயற்சிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த வீடியோ பேசுபொருளாகி வருகிறது.
இதுபோன்ற செயற்பாடுகள் சட்ட ரீதியாகவும், உடல் நலனையும் பாதிக்கக்கூடியவை என்பதால், பொதுமக்கள் மேலும் பொறுப்போடு செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.