பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் மீதான வழக்கு…. உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!
SeithiSolai Tamil May 06, 2025 08:48 PM

பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர் ரகுமான் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படம் குழுவினருக்கு எதிராக பாடகர் பயாஸ் வாசிபுதீன் என்பவர் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பதிவு உரிமை மீறல் வழக்கு தொடர்ந்தார். அதில் வீரா ராஜா வீரா பாடலில் பயாசின் தாத்தா மற்றும் தந்தை பாடிய சிவ ஸ்துதி பாடலின் சில பகுதிகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த மாதம் இந்த மனு விசாரணைக்கு வந்த போது ஏ.ஆர் ரகுமான் தரப்பில் சிவ ஸ்துதி பாடல் மூலம் ஈர்க்கப்பட்டு அதை தழுவி வீரா ராஜா வீரா பாடலை உருவாக்கியதாக கூறியுள்ளனர். இதனால் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் 2 கோடி ரூபாய் தொகையை டெல்லி நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் 2 லட்ச ரூபாயை பயாசுக்கு கொடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஏ.ஆர் ரகுமான் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஹரிசங்கர் மற்றும் அஜய் திக்பால் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்று கொண்ட நீதிபதிகள் முந்தைய உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.