“இளம்பெண்ணை கடிக்க துரத்திய நாய்”… தப்பிக்க ஓடியபோது 20 அடி பள்ளத்திலிருந்து விழுந்து முதுகெலும்பு… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!
SeithiSolai Tamil May 06, 2025 09:48 PM

உத்திர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் கடந்த திங்கட்கிழமை காலை பெண் ஒருவர் வாக்கிங் சென்றார். அவர் சாலையின் ஒரத்தில் நடந்து சென்ற நிலையில் எதிரே இளம் பெண் ஒருவர் தனது செல்லப்பிராணியான நாயுடன் வந்தார். திடீரென அந்த நாய் நடந்து சென்ற பெண்ணை கடிக்க சென்றது. அப்போது அந்தப் பெண் நாயிடமிருந்து தன்னை காப்பாற்றுவதற்காக சென்ற நிலையில் நிலை தடுமாறி 20 அடி உயரம் கொண்ட மேடையில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

அவர் கீழே விழுந்ததை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்தால் அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர் “நாய் திடீரென அவரை தாக்க வந்ததால் தன்னை காப்பாற்ற முயன்ற நிலையில் நிலைத்தடுமாறி கீழே விழுந்துவிட்டார். எங்களுக்கு 4 மாத குழந்தை உள்ளது. தற்போது அவருக்கு அவசர அறுவை சிகிச்சை நடந்து வருவது மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதை தொடர்ந்து சங்கவளாகத்தில் செல்ல நாய்கள் தொடர்பாக கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.