ஏப்ரல் 22ம் தேதி தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு இந்தியா தரப்பில் பதிலடி விரைவில் கொடுக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், போர்க்கால ஒத்திகை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தில், உள்துறை செயலாளர், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்னை விமான நிலையம், ஆவடி ராணுவ தளவாடம், மணலி பெட்ரோலிய நிறுவனம் ஆகிய இடங்களில் ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.