சசிகுமார் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர்கள் பாலா மற்றும் அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் சசிகுமார். 2008 ஆம் ஆண்டு சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் ஆகவும் நடிகராகவும் அறிமுகமானார் சசிகுமார். முதல் படத்தின் மூலமாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் சசிகுமார்.
அடுத்ததாக 2010 ஆம் ஆண்டு ஈசன் எந்த திரைப்படத்தை இயக்கினார் சசிகுமார். இது தவிர சுப்பிரமணியபுரம் பசங்க ஆகிய திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார். அவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், தாரை தப்பட்டை, வெற்றிவேல் போன்ற குடும்ப கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்தார் சசிகுமார்.
சசிகுமார் படம் என்றாலே எந்த ஒரு ஆபாசமும் இருக்காது குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்ற நம்பிக்கை மக்களிடையே இருக்கிறது. உடன்பிறப்பே கொடிவீரன் போன்ற குடும்பத்திற்கு முக்கியத்துவம் தரும் பல படங்களில் நடித்து வருகிறார் சசிகுமார். தற்போது பல படங்களில் கமிட் ஆகி பிஸியான நடிகராகவும் இருந்து வருகிறார் சசிகுமார்.
தற்போது சசிகுமார் சிம்ரன் ஆகியோர் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரிலீஸாகி இருக்கிறது. இந்தப் படத்திற்கு அனைவரும் நல்ல விமர்சனங்களை கூறி உள்ளனர். தற்போது சசிகுமார் மதுரை உள்ளிட்ட பல ஊர்களில் இருக்கும் தியேட்டர்களுக்கு சென்று மக்களோடு மக்களாக இணைந்து படம் பார்த்து வருகிறார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய சசிகுமார், பெண்கள் தியேட்டருக்கு வருவதில்லை என்று கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், இன்றைய காலகட்டத்தில் ஓடிடி வந்ததிலிருந்து பெரும்பாலான குடும்பப் பெண்கள் தியேட்டருக்கு படம் பார்க்க வருவதில்லை. இப்போது டூரிஸ்ட் ஃபேமிலி படம் பார்க்க அதிக பெண்கள் குடும்பத்துடன் வருவது பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. இதுபோன்ற படங்கள் இனி வருங்காலத்தில் அதிகமாக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று பேசி இருக்கிறார் சசிகுமார்.