மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்றதால் கணவர் தற்கொலை!
Dinamaalai May 07, 2025 01:48 AM

தூத்துக்குடி மாவட்டம் சோரீஸ்புரத்தில் மனைவி கோபித்துக் கொண்டு தாயார் வீட்டுக்கு சென்றதால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

தூத்துக்குடி சோரீஸ்புரம், மாதவன் காலனி 3வது தெருவைச் சேர்ந்தவர் சுடலைமணி மகன் யுவராஜா (31), இவர் தனியார் கம்பெனியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். 

இந்நிலையில் நேற்று குடும்பத் தகராறு காரணமாக மனைவி 2 குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டாராம். இதனால் மனவேதனையடைந்த யுவராஜா நேற்று இரவு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்  சைரஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.