FLASH: “வீரர்களை பின் தொடர்ந்து நேரடி ஒளிபரப்பு செய்யாதீர்கள்…” ஊடகங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு…!!
SeithiSolai Tamil May 10, 2025 03:48 AM

காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இருப்பினும் இந்தியா வலுவான S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பாகிஸ்தானின் முயற்சிகளை தகர்த்து எறிந்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து நேற்று இரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதை இந்தியா தனது பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தகர்த்தெறிந்தது.

இந்த நிலையில் பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளை நேரடியாக ஒளிபரப்புவதை தவிர்க்குமாறு பாதுகாப்பு அமைச்சகம் ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளை நேரலையில் காண்பித்தால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. மும்பை தாக்குதல், விமான கடத்தல், கார்கில் போர் சமயங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

The post appeared first on .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.