விழா மேடையிலேயே மயங்கி விழுந்த நடிகர் விஷால்…. அவருக்கு என்னாச்சு…? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!
SeithiSolai Tamil May 12, 2025 03:48 AM

விழுப்புரம் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான மிஸ் திருநங்கை 2025 அழகி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விஷால் திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சற்று நேரத்தில் உடல் நலம் தேறி விஷால் எழுந்து நின்றார்.

இதனால் நிகழ்ச்சியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஜனவரி மாதம் மதகஜராஜா பட புரமோஷனில் விஷால் பேசிய போது அவரது கை நடுங்கியதால் அவரது உடல் நலம் குறித்து பலரும் கவலை தெரிவித்து அவர் குணமாக வேண்டும் என வேண்டிக்கொண்டனர். தற்போது மேடையிலேயே விஷால் மயங்கி விழுந்ததால் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.