“மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை விடுங்க…. கல்வி நிதியை தாங்க….” கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு….!!
SeithiSolai Tamil May 10, 2025 04:48 AM

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முடியாது என தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தது. தமிழ்நாட்டில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரள மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவினை விசாரித்த நீதிபதிகள் மாநில அரசு புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல.

நீங்கள் டெல்லியில் உள்ளீர்கள். உங்களுக்கு இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் கற்றுக் கொள்ளுங்கள். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு உத்தரவிட முடியாது என கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.

இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது, தேசிய கல்விக் கொள்கை போன்ற எந்த ஒரு கொள்கையையும் ஏற்றுக்கொள்ள மாநிலங்களை நீதிமன்றத்தால் கட்டாயப்படுத்த முடியாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்.

அரசியலமைப்பு சட்டத்தை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. எனவே மாநிலங்களுக்கு எதிரான மிரட்டல் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். நமது கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

The post appeared first on .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.