BREAKING: “குடியிருப்புப் பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்”… பஞ்சாப் ஃபிரோஸ்பூரில் 3 பேர் தீக்காயம்..!! அதிர்ச்சி வீடியோ.!!
SeithiSolai Tamil May 10, 2025 07:48 AM

இந்தியா–பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றத்தின் மத்தியில், பாகிஸ்தானின் ட்ரோன்கள் தொடர்ந்து இந்திய எல்லை பகுதிகளைத் தாக்கி வருகின்றன. இந்தியா பாகிஸ்தான் எல்லையில் 26 இடங்களில் ட்ரோன்கள் காணப்பட்டன. அதனடிப்படையில், வெள்ளிக்கிழமை(இன்று ) பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் பகுதியில் ஒரு குடியிருப்புப் பகுதியை பாகிஸ்தான் ட்ரோன் தாக்கியதாக, அதில் 3 பேர் தீக்காயங்களுடன் காயமடைந்துள்ளதாக எஸ்எஸ்பி பூபிந்தர் சிங் சித்து தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

“>

 

பாகிஸ்தானின் முயற்சிகள், இந்தியாவின் வான் பாதுகாப்புப் படையினரால் பெரும்பாலும் நடுநடுவே செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் சில ட்ரோன்கள் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. பாகிஸ்தான் திட்டமிட்டு இந்திய உள்கட்டமைப்பை குறிவைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது எனக் கூறப்படும் நிலையில், வெள்ளிக்கிழமை ஜம்மு, சம்பா மற்றும் பதான்கோட் பகுதிகளிலும் பாகிஸ்தான் ட்ரோன்கள் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளன. பாதுகாப்பு படைகள் மிகுந்த அவலையில் செயல்பட்டு வருகின்றன.

The post appeared first on .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.