டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்... 2,600 காலி பணியிடங்கள்... எஸ்பிஐ வங்கியில் ஜாக்பாட்!
Dinamaalai May 10, 2025 07:48 PM

டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.50,000 சம்பளத்தில் எஸ்பிஐ வங்கியில் 2600 காலிப்பணியிடங்கள் காத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த காலி பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும், ஆர்வமும் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரு.48,400 சம்பளம் வழங்கப்படும். 

நாடு முழுவதும் ஆயிரக்க்ணக்கான வங்கி கிளைகளுடன் இயங்கி வரும் எஸ்பிஐ வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

எஸ்பிஐ வங்கி சர்கிள் அதிகாரி CBO பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

சர்கிள் பேஸ்டு ஆஃபிசர் (CBO)-2600

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். என்ஜினியரிங், மெடிக்கல், காஸ்ட் அக்கவுண்டிங் அல்லது சிஏ முடித்து இருப்பது கூடுதல் தகுதி. 

விண்ணப்பதாரர்கள், ஏதேனும் ஒரு வணிக வங்கி அல்லது ஊரக வங்கிகளில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருத்தல் அவசியம். 

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 30.04.205 அன்று தேதிப்படி 21 வயதினை பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ் சி எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்க்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

சம்பளம் எவ்வளவு

மாதம் ரூ. 48,480/-

தேர்வு முறை:

ஆன்லைனில் எழுத்து தேர்வு நடைபெறும். பின்னர் நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வை பொறுத்தவரை தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், மதுரை, நாகர்கோவில், சேலம், நாமக்கல், தஞ்சை, திருச்சி, நெல்லை, வேலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.

எப்படி விண்ணப்பிப்பது?

https://sbi.co.in/ என்ற ஆன்லைன் இணையதளம் வாயிலாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். 

கடைசி தேதி: 29.05.2025 

விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாகவே விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். எஸ் சி எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.