இந்தியாவுடனான போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்க அறிவுரை வழங்கியுள்ளது.
காஷ்மீர், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் போர் பதற்றத்தை தணிக்க வழிமுறைகளை கண்டறியும்படி பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது. மோதலை தவிர்க்க ரு நாடுகளும் ஆக்கப்பூர்வ பேச்சுக்களை இமேற்கொள்ள வேண்டும் எனவும், பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் ராணுவத் தளபதியுடன் அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.