போர் தொடர்பான உண்மையான தகவலை தெரிந்து கொள்ள இந்த வாட்ஸ்அப் சேனலை பின்பற்றுங்கள் - பாதுகாப்பு அமைச்சகம்..!
Newstm Tamil May 10, 2025 11:48 PM

ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

இந்தியாவின் தாக்குதலில் அந்நாட்டிற்கு பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. ஆனால், அது குறித்து எதுவும் தெரிவிக்காத பாகிஸ்தான், இந்தியா தாக்குதல், சேதம், வீரர்கள் குறித்து பொய்யான தகவலை பரப்பி வருகிறது.இதனை உடனடியாக ' FactCheck' செய்யும் மத்திய அரசு, பாகிஸ்தான் பரப்பும் பொய்யை அம்பலப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த முக்கியமான நேரத்தில், வாட்ஸ்அப் செயலியில் ஏராளமான பொய் தகவல்கள் பரவி வருகின்றன. எச்சரிக்கையுடன் இருப்பதுடன், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் போர் தொடர்பான உண்மையான தகவலை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்அப் சேனலை(https://whatsapp.com/channel/0029VaEHkn3JkK7BfWTsm23W) பின்பற்றுங்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.