பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மீண்டும் ஆலோசனை!
Top Tamil News May 10, 2025 07:48 PM

பாகிஸ்தானின் தொடர் தாக்குதலால் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு  இந்தியா தரப்பில் பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் அஜித் தோவல் ஆலோசனை நடத்தி வருகிறார். அடுத்தடுத்து அத்துமீறும் பாகிஸ்தானின் தாக்குதல்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடந்து வருகிறது. தொடர்ந்து பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடித்து வருவது குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. 
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.