மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளதாவது: இன்று(மே 10) மாலை 5மணிக்கு போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்ட பிறகு பாக்., அத்துமீறி தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். நிலைமையை புரிந்து கொண்டு பாக்., உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாக்., தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றன. இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் நடவடிக்கைகள் உன்னிப்பாக கண்காணிக்து வருகிறோம்.
இவ்வாறு மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.