இன்று புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட கலால்துறை உத்தரவு..!
Newstm Tamil May 11, 2025 09:48 AM

மாமல்லபுரத்தில் இன்று (மே 11) சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு வன்னியர் சங்கம் சார்பில் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

புதுச்சேரி வழியாக வரும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி திண்டிவனம் வழியாக செங்கல்பட்டு சென்று பின்னர், அங்கிருந்து மாமல்லபுரம் செல்ல வேண்டும் என்று தமிழக காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

அதேநேரத்தில் மாநாட்டுக்கு வருபவர்களால் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க, புதுச்சேரியில் நாளை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.