அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் முதல் வேலையாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்தவர்களை சொந்த நாடுகளுக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்தார். கை, கால்களை சங்கிலியுடன் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. குறிப்பாக இதில் இந்தியர்கள் பலரும் இருந்தனா். இந்த விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப் யாருடனும் சமரசம் செய்ய போவது இல்லை என்று கூறவிட்டார்.
இதனை தொடர்ந்து ராணுவ உதவியுடன் கட்டாயப்படுத்தி சட்டவிரோத குடியேறிகளை அனுப்பி வருகிறார். மேலும் அமெரிக்காவிற்குள் நுழையும் நபர்களுக்கு பலத்த சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார். இதனால் வெளிநாட்டினர் பலரது அமெரிக்க கனவு, காத்திருப்பு பட்டியலில் உள்ளது. டொனால்ட் டிரம்ப் இதுவரை 1.52 லட்சம் பேரை சட்டவிரோதமாக குடியேறியதாக நாட்டை விட்டு அனுப்பிவிட்டார்.
அங்கு சட்டவிரோதமாக வசித்து வருபவர் ஒருவரை கைது செய்து, சிறை வைத்து விசாரித்து பின்னர் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க 17 ஆயிரம் டாலர் செலவாகிறதாம். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1.50 லட்சம் ஆகும். ஆனால் விருப்பப்பட்டு நாட்டை விட்டு வெளியேறுபவர் ஒருவருக்கு எல்லாம் கூட்டி பார்த்தால் வெறும் 1 லட்சம் ரூபாய் வரை மட்டுமே ஆவதாக கூறப்படுகிறது.