இஸ்ரேலின் டெல் அவிவ் நகர விமான நிலையத்திற்கு அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏவுகணைத் தாக்குதலையடுத்து, டெல்லியில் இருந்து டெல் அவிவுக்கு புறப்பட்ட விமானம் பாதியில் அபுதாபிக்கு திருப்பி விடப்பட்டது. இந்த சூழ்நிலையில், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஏர் இந்தியா நிறுவனம் மே 6 வரை அனைத்து டெல் அவிவ் பயணங்களையும் தற்காலிகமாக நிறுத்தியது. தற்போது அந்த முடிவு மே 8, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
வழக்கமாக, வாரத்தில் ஐந்து விமானங்களை டெல் அவிவ் நோக்கி இயக்கும் ஏர் இந்தியா, பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்படும் பயணிகளுக்கு, ஒரு முறை கட்டண மாற்ற விலக்கு அல்லது முழுமையான பணத்தை திரும்பப் பெறும் வசதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும், இதற்கான உதவிக்கு தனியொரு குழுவும் பணியில் இருப்பதாகவும் அந்த நிறுவனம் X தளத்தில் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
The post appeared first on .