ரவுண்ட் ராபின் முறைப்படி நடைபெற்ற இந்த தொடரில் ஒரு அணி மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோத வேண்டும். அந்த வகையில் இந்திய அணி இலங்கைக்கு எதிராக ஒரு வெற்றி, ஒரு தோல்வி மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு வெற்றிகளை பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் கொழும்புவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை அணியை இந்தியா எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதகொலில் தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய தொடக்க வீராங்கனைகள் பிரித்திகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தது.
பிரதிகா ராவல் 49 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க ஸ்மிருதி மந்தானா அதிரடி காட்டினார். ஸ்மிருதி 88 ரன்கள் எடுத்திருந்தபோது தொடர்ந்து மூன்று பவுண்டரிகளை அடித்து அவர் சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் 92 பந்துகளில் எல்லாம் சதத்தை பூர்த்தி செய்தார். ஸ்மிருதி 30 ஓவர் அளவில் சதத்தை பூர்த்தி செய்ததால், இன்று அவர் பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 116 ரன்களில் ஆட்டமிழந்ததால் இதில் 15 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.
ஒரு கட்டத்தில் இலங்கை அணி 173 ரன்களுக்கு மூன்று விக்கெட் எடுத்து நல்ல முறையில் சேசிங் செய்து கொண்டிருந்தது. ஆனால் அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இலங்கை மகளிர் அணி 48.2 ஓவர்கள் எல்லாம் 245 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய மகளிர் பந்துவீச்சு தரப்பில் சினே ரனா நான்கு விக்கெட்டுகளும் அமஞ்சோத் கவுர் மூன்று விக்கெட்களையும் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முத்தரப்பு கோப்பையை கைப்பற்றியது ஸ்மிருதி மந்தானா ஆட்ட நாயகி விருதும், ஸ்னே ரானா 15 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகி விருதையும் கைப்பற்றினார்.