பாமக கட்சியின் சார்பில் நேற்று சித்திரை முழு நிலவு மாநாடு மற்றும் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் ஏராளமான பாமக தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டின் போது ராமதாஸ் பேசியதாவது,
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடை தராததால் இந்த போராட்டத்தை அறிவிக்கிறோம். இதுவரை நடந்திராத வகையில் இந்த போராட்டம் இருக்கும். கடந்த 45 வருடங்களாக உங்களுக்காகவும் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் போராடி வெற்றி பெற்றவன் இந்த ராமதாஸ்.
ஒரு தொகுதியில் 2000 இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் என ஒவ்வொருவரும் 100 வாக்குகளை கொண்டு வந்தால் கண்டிப்பாக நாம் வெற்றி பெறலாம். 50 தொகுதிகளில் நாம் எளிதாக வெற்றி பெறலாம். ஆனால் இங்கு பலரும் உழைக்காமல் இருப்பது தான் வேதனை அளிக்கிறது.
அப்படி நடந்தால் உங்கள் பொறுப்புகள் உங்களிடம் இருக்காது. எம்எல்ஏ என்று கூட பார்க்க மாட்டேன் வங்கக்கடலில் தூக்கி வீசி விடுவேன். சிலர் எங்கே கூட்டணி யாருடன் கூட்டணி என்று கேட்கும் நிலையில் கூட்டணி பற்றி முடிவு செய்ய நான் இருக்கிறேன். அதை நான் பார்த்துக் கொள்வேன்.
இனி உன்னை நீ திருத்திக்கொள். இல்லையெனில் கட்சிப் பொறுப்பில் இருக்க முடியாது. உங்களுடைய பதவிக்கு இளம் சிங்கங்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீ காலை வாரிக் கொண்டிருக்கிறாய். ஆனால் இனி அது நடக்காது. மேலும் இந்த கட்சி தனிப்பட்டவரின் சொத்து கிடையாது என்று கூறினார்.